Pages

Monday, June 17, 2013

இணைய மொண்ணைகளும்--இலக்கிய மொண்ணைகளும்--சங்ககால இலக்கிய பிதாமகன்களும்....

வணக்கம் அன்பர்களே.....!!!!

மிக நீண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு பதிவு....

எச்சரிக்கை.. பதிவு....சில சமயம் முகம் சுழிக்க வைக்கும்...
பதிவில் நான் யாரையும் குறிப்பிடவில்லை...நீங்களாக இன்னாரை கற்பனை  செய்துகொண்டால் நான் பொறுப்பில்லை...முதலில் சிறிய சுய புராணம்...

ஜனவரி 20 ம் தேதி என் மகன்-விடுதி வார்டன் -tablet- பாஸ்வோர்ட் சொல்லாததால்..அறைதல்...காது ஜவ்வு..கிழிதல்--மருத்துவம்--புகார்.....TO ALL CBSE...SECRETARY....ஏப்பிரல் மாதம்--கட்டாய வெளியேற்றம்.....புது பள்ளி சேர்க்க அலைச்சல்....மாதம் 2000 KM...பயணம்....
நான் பார்த்து வளர்ந்த மச்சினியின் சந்தேகத்துக்குரிய மரணம்...தொடர்பான புகார்....விசாரணை...
மகள் +2 முடித்தல்....கல்லூரி அலைச்சல்....இன்னும் சேர்க்க வில்லை...
இணையம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை வருவதும்....போவதும்...அது குறித்த புகார்....இன்னும் சரியாகவில்லை...
பல்கலைகழகம் அரசுடமை...இப்படி பிரச்சனைகளே வாழ்க்கையாக கடந்த ஆறு மாதங்கள்...எனினும் மொபைல் மூலமாக முடிந்த வரை அனைத்தையும் படித்து,,கவனித்து வந்தேன்...பின்னூட்டம் இட முடியவில்லை...

இனி பதிவு....

                                           
அன்பு பதிவர்களே...இங்கு  இணையத்தில் படிப்பவர்கள் 100% பள்ளி,,கல்லூரிகளை கடந்தது வந்தவர்கள்தான்.நமக்கு நினைவு தெரிந்து ஐந்தாம் வகுப்பில் மனப்பாட செய்யுள் ஆரம்பித்துவிடும்.

இந்த வ.வு.சாமிநாத ஐயர்....இருக்காரே...சும்மா இல்லாமல் அனைத்து சங்க கால தமிழ் பாடல்களை தொகுத்து கொடுத்து காலாகாலத்துக்கும் மாணவர்களின் மனன திறமையை சோதித்துக்கொண்டு இருக்க ஏற்பாடு செய்துவிட்டார்....

சங்ககால தமிழ் பாடல்களை புரிந்து அதன் தமிழ் அழகை ரசிக்கவே இன்னும் பல ஆயுள் தேவை என்கிறபோது.....புதிதாக முளைத்த 40 வருட காளான்கள் கழியும் கழிவை நாம் தலையில் தேய்த்துக்கொண்டு முடி வளர்க்கவில்லையாம்...என்னையா நியாயம் இது???

எதுயா இலக்கியம்...???? வரைமுறை என்ன...???


இதோ காலம் காலமாக பேப்பர்,கணினி,இன்ன பிற எதுவும் இல்லாமல்
வெறும் ஓலை சுவடியிலும்,கல்வெட்டுகளிலும் காலத்தால் அழியாமல்
வெறும் வாய்வழி வழியாக காலம் கடந்தது நிற்கிறதே சங்க கால தமிழ் பாடல்கள்....தமிழ் இலக்கணங்கள்....அது எல்லாம் என்ன மக்கிப்போன குப்பைகளா???

அரசீற்றமும்,,கலவிகளும்,,இன்ன பிற நீங்கள் எழுதும் குப்பைகளும்,,
ஏற்கெனவே தமிழில் வந்துவிட்டது ஐயாக்களே....ஆனால் அது நாகரீகமாக...
சற்றே கடின தமிழில்....

சுஜாதா திருக்குறளை எளிமைபடுத்தி விளங்க வைத்தது போல்...நீங்களும் சங்க தமிழ் பாடல்களை எளிமை படுத்தி உங்கள் எண்ணங்களை இடையில் புகுத்தி தமிழை அழகாக்கி வளர்த்தால் அது போற்றப்படும்...வாங்கப்படும்...
அதை விடுத்து...



என்னை யாரும் மதிக்கவில்லை...போற்றவில்லை...பு_____வில்லை...என்று
ஊளை இட்டால் என்ன பயன்???

இதுல வேற இந்த சுண்டல் மடிக்கும் பேப்பரில் இவர்கள் எழுதியதை நாம் படிக்கவில்லையாம்...வாங்கவில்லையாம்...படித்தால்தான் அதை பற்றி பேச தகுதி வந்து....ஆண்கள்,,பெண்களுக்கு  இரண்டாக உருவாக்கம் ஆகி மதிக்கபடுவோர்கள்...ஆவோமாம்....டேய்...நாதாரிகளா....அப்படி உருவகம் ஆனா அவங்க ஏலியன்ஸ்டா...

தமிழுக்கு இதுவரை ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி  போடாமல்....
அப்புறம் என்ன ம___க்கு இங்க எழுதுறீங்க???


ஞானம்...ஞானம்....அப்படினா??? நாக்கு,,______ சூடு போடுறதா???
அப்படி ஒரு ஞானம் எங்களுக்கு தேவை இல்லை....
இந்த காலத்தில் பொழுதுபோக்கிற்கு  மிக அதிகமான  வாசல்கள் இருக்கும் பொது நீங்கள் எழுதும் குப்பைகள்---துடைக்க கூட தேவைபடாது...
ஒருவேளை எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாடு வரும்போது யோசிக்கிறோம்...

இலக்கிய அப்பாடக்கர்கள் ....ஒருவர்,,இரண்டாகி,,,மூன்றாகி...இன்னும் வளரும் போல....

இணையத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் மொண்ணைகள் தான்....எங்களுக்கு மொன்னைகள் போதும்....இங்கு வருவது பொழுது போக்கிற்காகவும்...இணைய நட்பிற்காகவும்தான்....

ஐயா சாமிகளே...உங்கள் இலக்கிய அறிவு சார் விளையாட்டுகளை உங்களுக்குள்ளேயே...MUSICAL CHAIR...வைத்து விளையாடிக்கொண்டிருங்கள்....

நாங்கள் கில்லி,,கோலி,,டயர் உருட்டல் விளையாடிக்கோள்கிறோம்...

எங்களுக்கு மைக் மோகன் போதும்....அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி...
அவர் எங்களை மதித்து...பரஸ்பரம்...ஆனந்தம் அடைந்தால்....அதுவே வாழ்க்கை.....

எங்களுக்கு இளநி தண்ணி போதும்...உடல் சூட்டை குறைக்க...இந்த இளநி தண்ணி இருக்கிறதே அது உடலில் செய்யும் மாய்மாலங்கள் கணக்கில் அடங்கா.....

எங்களுக்கு கௌதம புத்தரின் பொன்மொழிகள் போதும்....எங்கள்  வாழ்வு சிறப்பாய் அமைய....

நாங்கள் மனுஷனாக...எங்கள்  தாய்தந்தையருக்கு ஒழுங்கான புத்திரனாக இருந்தாலே போதும்...பிறவி பயன் அடைய....

ஐயா...எங்களுக்கு 2கண்.2காது..2கைகள்..2கால்கள்...இப்படி சராசரியான மனிதர்களாகவே நாங்கள் வாழ பிரியப்படுகிறோம்...
வெள்ளி கிரகத்திலோ...அல்லது வேறு எங்கேயோ வாழ அல்ல...

இறுதியாக......

அந்த முதியவர் தன்னை படைத்த தந்தையாக இருந்தால்...?????

வெளிநாட்டில் மொழிதெரியாத கண்டத்தில் இருக்கும்போது அந்த கழிவுகளை படிக்காத--மொன்னையனிடம் கக்கா போக,,கழுவ,,,குடிக்க ""தண்ணி"" வேண்டும் என்றால் ஹாய் கூட சொல்லாமல் எப்படி ஐயா கேப்பீர்கள்????

தொலைக்காட்சியே இல்லாத ஊரில் பொழுது விடியுமா???????

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு....இணையம் படுத்தி எடுப்பதால்....
பிறகு தொடருகிறேன்...

படங்கள் கூகிள் .....